Home /News /tamil-nadu /

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்

கும்பகோணம் வெற்றிலை

கும்பகோணம் வெற்றிலை

தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை அமைப்பு தன்மையில் மாறுபட்டிருக்கிறது. காவிரி படுகை நீர், மண் வளம், உழவர்களின் நுணுக்கமான உழைப்பு, தக்க சமயத்தில் பயிரிடும் முறை, பாரம்பரிய அறிவினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறை தான்  இதனை  வசப்படுத்தி தனது தனிசிறப்பை காட்டுகிறது.

மேலும் படிக்கவும் ...
    கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு வாய்ந்த இரு பொருள்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் உலகளவில் அது ஏற்றமதி செய்யப்படும், இதனால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பயன்அடைவார்கள் என்று அறிவுசார் சொத்துரிமைஅட்டார்னி சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.

    கும்பகோணம் வெற்றிலைக்கான விண்ணப்பத்தை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், தோவாளை மாணிக்க மாலைக்கான விண்ணப்பத்தை கன்னியாகுமரி தோவாளை மாணிக்கமாலை கைவினை கலைஞர்கள் நலச்சங்கமும் அளித்துள்ளன. இது தொடர்பாக தஞ்சையில்  செய்தியாளர்களை அறிவுசார் சொத்துரிமைஅட்டார்னி சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி சந்தித்தார்.

    அப்போது அவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடுக்காக  அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்   தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற "கும்பகோணம் வெற்றிலை"க்கு புவிசார் குறியீடு கேட்டு அதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    கும்பகோணம் வெற்றிலை:  "கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்,  காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்" என மகாகவி பரதியார் தன்னுடைய பாடலில் கூறியுள்ளபடி, காவிரி ஆற்று படுக்கையில் விளைவதால் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது வெற்றிலை. அதிலும் கும்பகோணம் பகுதியில் இந்த வெற்றிலை சிறப்பாக விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை என பெயர் பெற்று விளங்குகிறது.

    சஞ்சய் காந்தி - அறிவுசார் சொத்துரிமைஅட்டார்னி சங்கத் தலைவர்


    காவிரி படுகையில் முக்கியமாக திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.பூம்புகாருக்கு ஆறு மைல் தொலைவில் புஞ்சை என்ற ஊர் உள்ளது. இவ்வூர் சிவன் கோயில் கல்வெட்டில் விக்கிரமசோழன் காலத்தில் மும்முடிச்சோழனின் பேரம்பழத்தில் தலைசெங்காட்டு மூலப்புருஷ கட்டிட, இளவரசியின் வேண்டுகோளுக்கின்படி வெற்றிலை வைக்க ராஜநல்லூரில் பூதானம் செய்யப்பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் முழு ஊரடங்கு: கேரள எல்லை களியக்காவிளையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்


    பூதானம் அளிக்கப்பட்ட இவ்வூர் தற்போது சீர்காழி அருகே ராதாநல்லூர் என அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்களில் பாக்குவெட்டிகள் கிடைத்துள்ளது. இவை மத்திய காலத்தை சேர்ந்தவை (கிபி.10-முதல் 14 ம் நூற்றாண்டு) இக்காலத்து முதலே காவிரி படுக்கையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை இந்த அகழ்வாராய்ச்சி உறுதி செய்துகிறது.எனவே தான் பல நூறாண்டுகளை கடந்து, காவிரி டெல்டாவை அடக்கியுள்ள மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது.

    கருப்பு வெற்றிலை என்று கைமாறு வெற்றிலையே சித்த வைத்தியத்துக்கு மிகுந்தளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை கார வெற்றிலை எனவும், கைமாறு வெற்றிலை எனவும் அழைக்கப்படுகிறது. நாகவல்லி என்ற இலக்கியத்தில் நீலகண்ட இலை என்றும் மடக்குருவி என்றும் இதன் மருத்துவ குணம் கூறப்படுகிறது.வெற்றிலையை சாறுபிழிந்து கண்ணில் இட்டால் கண் வலியும், காதில் இட்டால் காதுவலியும் நீங்கும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் வால் மிளகையும் கூட்டி சுவைத்தால் எளிதில் சீரனமானகும். வாய் துர்நாற்றம் நீக்கும். மனதுக்கு உற்சாகம் அளிக்கும். பற்கள் கரையாமல் அசைவு நீங்கு உறுதிதன்மை ஏற்படும்.

    மேலும் படிக்க: காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை... போலீசார் தீவிர கண்காணிப்பு


    இலை, காம்பு, கொடி, வேர் ஆகிய வெற்றிலையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கண்ணின் இமைகள் அடிக்கடி துடித்தலுக்கு வெற்றிலை சாற்றில் சுக்கை உரத்தை கண்ணில் விட்டால் இமை துடித்தால் நிற்கும். வெற்றிலை, சுக்கு, மிளகு மென்று விழுங்கினால் வாயு தொல்லை நீங்கும். கருப்பு வெற்றிலையும், கற்பூர வல்லி இலையையும் அனலில் காட்டி சாறு பிழிந்து பூசினால் தலைவலி சில நிமிடங்களில் நீங்கும்.

    உழவர்கள் குறிப்பாக தஞ்சாவூர் உழவர்கள் பயிரிடுவது முதல் அறுவடை செய்யும் காலம் வரை ஓய்வு நேரங்களில் அதிக நேரமாக முக்கியப் பணியாக வெற்றிலை பாக்கை போட்டு தன்னுடைய உற்சாகத்தை பேணிக் கொண்டனர். எனவே இந்த பகுதிகளில் தலைச்சிறந்து விளங்குகிறது. விருந்தோம்பலுக்கு தலைச்சிறந்து விளங்கும் மாவட்டமாக தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சுபகாரியங்கள், நிகழ்வுகளுக்கும் இந்த வெற்றிலை பாக்கு வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட அரசிதழில் கி.பி.1883 ம் ஆண்டு திவான்பகதூர் வெங்கடசாமி ராவ் என்பவர் இந்த கும்பகோணம் வெற்றிலையைப் பற்றியும், அதன்பிறகு கி.பி.2000, 2002ம் ஆண்டுகளில் அரசு நாளிதழ் மறுபதிப்பில் இந்த கும்பகோணம் வெற்றிலையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை அமைப்பு தன்மையில் மாறுபட்டிருக்கிறது. காவிரி படுகை நீர், மண் வளம், உழவர்களின் நுணுக்கமான உழைப்பு, தக்க சமயத்தில் பயிரிடும் முறை, பாரம்பரிய அறிவினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறை தான்  இதனை  வசப்படுத்தி தனது தனிசிறப்பை காட்டுகிறது.

    தோவாளை மாணிக்கமாலை


    அதேபோல் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை என்ற ஊர் உள்ளது. சங்கமிக்கும் இக்கடல் காற்றினால் இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்து காட்டுகிறது. தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்படும், பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகளவில் உள்ளது. தோவாளையின் தெற்கே காற்றாடி மலை, வடக்கே தாடக மலை ஆகிய இரு குன்றுகளுக்கு இடையே இந்த ஊர் உள்ளதால், இந்த ஊருக்கான இயற்கையான தட்பவெட்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை பூக்கள் விளைவிப்பதற்கும், பூக்கைளை பின்னுவதற்கும் சரியான சூழல் அமைந்துள்ளது.

    இதையும் படிக்க: ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி கைது...யார் இவர்?


    இந்த சூழலை இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் சரியாக பயன்படுத்தி தோவாளை மாணிக்கமாலையை உற்பத்தி செய்கிறார்கள்.இந்த பூவை பார்ப்பதற்கு பட்டையாக பாய் விரித்தார்போல் இருக்கும். வெள்ளை அரளி, சிவப்பு அரளிப்பூ. இங்கு விளைகின்ற காட்சி கோலம் காண்போரை வியக்க வைக்கிறது. இந்த வெள்ளை அரளிப்பூவையும், சிவப்பு அரளிப்பூவையும் பறித்து சம அளவில் கட்டுகிறத போது அது மாணிக்கம் போன்று தோற்றமளிக்கும். அதனால் தான் இதற்கு மாணிக்கமாலை என பெயர் பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இரு பொருள்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால் உலகளவில் அது ஏற்றமதி செய்யப்படும், இதனால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பயன்அடைவார்கள் என  சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

    பேட்டி சஞ்சய் காந்தி வழக்கறிஞர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kumbakonam

    அடுத்த செய்தி