Home /News /tamil-nadu /

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு.. 8 ஆண்டுகள் போராட்டத்துக்கு கிடைத்த முடிவு..

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு.. 8 ஆண்டுகள் போராட்டத்துக்கு கிடைத்த முடிவு..

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்

Narasingampet Nathaswaram: பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் ராஜரத்னம் பிள்ளை வாசித்து உலகப் புகழ் பெற்றவை நரசிங்கம்பேட்டை  நாதஸ்வரம் ஆகும்.

திராவிட இசைக் கருவியான "நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு" எட்டு  ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

17 ம் நூற்றாண்டிலிருந்து தஞ்சையில் புகழ்பெற்று வரும் திராவிட இசைக்கருவியான   நாதஸ்வரம் கடினமான இசைக்கருவியாக இருந்த நிலையில், 1955 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகில் உள்ள "நரசிங்கம்பேட்டை"  கைவினைக் கலைஞர்  ரங்கநாத ஆச்சாரி என்பவர், எளிமையாக வாசிக்கும் வகையில் உருவாக்கியது தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம். தற்போது தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டையில்  20 குடும்பங்களை சேர்ந்த  இசைக்கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Also Read: கோவை தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பிரபல நடிகரின் சகோதரர் கைது

பல்வேறு இசை கலைஞர்களால் இசைக்கப்படும்   பாரம்பரிய இசைக்கருவி ஆகும். ஆச்சாமரம் எனும் வகை மரத்திலிருந்து பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பாரம்பரியமாக இசைக்கப்படும் நாதஸ்வரத்திற்கு, 8 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் ராஜரத்னம் பிள்ளை வாசித்து உலகப் புகழ் பெற்றவை நரசிங்கம்பேட்டை  நாதஸ்வரம் ஆகும். இதுவரை தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், தற்போது நாதஸ்வரத்துடன் சேர்த்து, பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த மாவட்டமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது என்றார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Music, Tanjore

அடுத்த செய்தி