• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தஞ்சையில் இரவு நேர ஊரடங்கால் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்... விவசாயிகள் வேதனை..

தஞ்சையில் இரவு நேர ஊரடங்கால் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்... விவசாயிகள் வேதனை..

பூக்கள் விற்பனை குறைவானதால் விவசாயிகள் வேதனை - தஞ்சை

பூக்கள் விற்பனை குறைவானதால் விவசாயிகள் வேதனை - தஞ்சை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தஞ்சையில் அறுவடைக்கு தயாரான பூக்களை பறிக்க முடியாமல், கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக கோவில் விழாக்களுக்கு தடை மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் செண்டி பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடை செய்த பூக்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமலும், உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மாவட்டத்தில்  மல்லிகை, முல்லை, கனகாம்பரம். செண்டி பூக்கள், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மார்க்கெட்டுகளுக்கும், திருவாரூர், மன்னார்குடி, வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். இதில் மல்லிகை. முல்லை, கனகாம்பரம் பூக்கள் காலை நேரத்தில் அறுவடை செய்யப்படும். செண்டி பூக்கள் மாலை நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு இரவு நேரங்களில் மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டு காலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக  சோழன் மாளிகை, ஆத்தாடி, திருக்கானூர்பட்டி, குருங்குளம், திருவையாறு, பாபநாசம், உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் செண்டி பூக்கள் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன.

    60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகும் இந்த பூவை, மாலையில் பறித்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும். ஆனால், இரவு நேர ஊரடங்கால் போக்குவரத்து இல்லாததால் வெளியூர்களுக்கு பூக்களை அனுப்ப முடிவதில்லை. அத்துடன், கோயில் திருவிழாவுக்கு தடை, சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு காரணமாக பூக்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், 50 ரூபாய் வரை விற்பனையான செண்டி பூ, தற்போது 15 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் படிக்க... Puducherry | புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரம் - தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு

    இதுகுறித்து செண்டி பூக்கள் சாகுபடி செய்த விவசாயி குருநாதன் கூறும்போது, ” நான் ஒரு ஏக்கரில் செண்டிப்பூ சாகுபடி செய்துள்ளேன். ஊரடங்கால் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன. திருவிழாக்கள் கிடையாது. திருமண நிகழ்ச்சிகள் இல்லை. இதனால் பூ வியாபாரம்  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூ மார்க்கெட் பூட்டப்பட்டதால் அறுவடை செய்த பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஒரு ஏக்கருக்கு 50,000 வரை செலவு செய்துள்ளோம். ஆனால் போட்ட முதலீடை எடுக்க முடியாத சூழல் உள்ளது. பூக்களை பறிக்காமல் விட்டால் செடியிலேயே அழுகிவிடும்” தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

     செய்தியாளர் : எஸ்.குருநாதன், தஞ்சாவூர் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: