தஞ்சாவூர் அருகே உயர் மின் அழுத்தக் கம்பியைத் தொடச் சென்ற மகனை காப்பாற்ற உயிரை விட்ட தந்தை!

தொடர்ந்து, அவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து, அவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

 • Share this:
  தஞ்சாவூர் அருகே உயர் மின் அழுத்தக் கம்பியைத் தொடச் சென்ற மகனை காப்பாற்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  தஞ்சாவூர்  மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (34). இவர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஐடி கம்பெனியில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

  தற்போது கொரோனா பெரும் தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில், கதிர்வேல் இன்று அவரது வீட்டில் இருந்து பணி செய்து கொண்டிருந்தார்.

  இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி  இன்று காலை அறுந்து கிடந்துள்ளது. அதை அவரது இரண்டு வயது மகன் அன்புச்செல்வன் ஓடி போய் பிடிக்க சென்றுள்ளார். இதனை கவனித்த கதிர்வேல் மகனை காப்பாற்ற வேண்டும் என்று முனைப்பில் செய்வதறியாது, சிறுவனை படித்து தள்ளிவிட்டுள்ளார்.

  இதில் கதிர்வேல் மீது மின்சாரம் பாய்ந்தது. தொடர்ந்து, உயிருக்கு போராடும் நிலையில் கிதிர்வேலை கிராமத்தினர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

  தொடர்ந்து, அவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  செய்தியாளர் - குருநாதன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: