புறவழிச் சாலைகள் விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு : தூக்குகயிறு மாட்டியும், சங்கு ஊதியும் விவசாயிகள் போராட்டம்
புறவழிச் சாலைகள் விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு : தூக்குகயிறு மாட்டியும், சங்கு ஊதியும் விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Thanjavur District : விளைநிலங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தூக்குக்கயிறு மாட்டியும், சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தூக்குக்கயிறு மாட்டியும், சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சுமார் 22 கோடி மதிப்பீட்டில் கண்டியூரில் இருந்து திருவையாறு வரை 6.5 கிலோ மீட்டர் தூரம் விளைநிலங்களில் இந்த புறவழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் புறவழிச் சாலைகள் விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டியூர் அருகே குடமுருட்டி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விளைநிலங்களில் தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டும், சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கண்டியூரில் முதல் திருவையாறு வரை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்றும், தற்போது விளைநிலங்களில் புறவழிச் சாலைகள் அமைப்பதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும். இத்திட்டதால் திருவையாறு, கண்டியூர், நடுக்கடை உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.