• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!!

கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!!

கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!!

கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!!

பாலசுந்தரமணி, வளர்மதி ஆகியோரிடம் கொஞ்சம், கொஞ்சமாக 11 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் வசூலிக்கும், பூமிநாதன் என்பவர் விவசாயி சுப்பிரமணியனியம் வட்டியுடன் சேர்த்து 21 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

  • Share this:
கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவருக்கு சுமதி என்ற மனைவியும், தனலட்சுமி (7). மகாலட்சுமி (8) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இன்று காலை சுப்பிரமணியன் தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியன் தற்கொலைக்கு கந்து வட்டி தான் காரணம் எனவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் அவரது மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

Also read: கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது!

இதுகுறித்து அவர் கூறுகையில், தனது கணவர் சுப்பிரமணியன், குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த குண்டுமணி என்கின்ற பாலசுந்தரமணி, வளர்மதி ஆகியோரிடம் கொஞ்சம், கொஞ்சமாக 11 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் வசூலிக்கும், பூமிநாதன் என்பவர் விவசாயி சுப்பிரமணியனியம் வட்டியுடன் சேர்த்து 21 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் பணம் கொடுத்தவர்கள் சுப்ரமணியன் மற்றும் அவர் மனைவியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்  மனமுடைந்த விவசாயி சுப்ரமணியன்வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி கூறுகிறார்.

Also read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

இதையடுத்து தகவல் அறிந்த மதுக்கூர் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுப்ரமணியத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: