Home /News /tamil-nadu /

ஆடிட்டர் கொலையில் பண்ணை வீட்டு பணிப் பெண் பரபரப்பு தகவல்...

ஆடிட்டர் கொலையில் பண்ணை வீட்டு பணிப் பெண் பரபரப்பு தகவல்...

ஆடிட்டர் கொலை வழக்கு

ஆடிட்டர் கொலை வழக்கு

Thanjavur Auditor Murder :சாப்பிட்டு கொண்டிருந்த ஆடிட்டரை துரத்தி துரத்தி வெட்டினர் என்றும், தடுக்க போன தன்னையும் கீழே தள்ளிவிட்டனர் எனவும் ஆடிட்டர் கொலை வழக்கில் அங்கு பணி புரிந்த பெண் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,  கரந்தை பகுதி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45) ஆடிட்டர். இவர் தன் வீட்டுக்கு அருகில் பண்ணை ஒன்று வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். தினமும் பணி முடித்து இரவு பண்ணை வீட்டில் இரவு உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வழக்கம் போல் இரவு பண்ணையில் சாப்பிட அமர்ந்துள்ளார். அப்போது உங்களிடம் பேச வேண்டும் என மூன்று பேர்  உள்ளே வந்துள்ளனர்.  அப்போது மகேஸ்வரன் எதிர்பாராத நேரத்தில் ஆடிட்டரை மூன்று பேரும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

தகவறிந்து அங்கு வந்த மேற்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா விசாரணை மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பண்ணை வீட்டுக்கு எதிரே உள்ள  மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த இட்லி கார்த்தி (எ) கார்த்தி நடத்தி வந்துள்ளார். மேலும்  அவர் முறையாக ஒப்பந்தம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கழிவறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் புகார் கொடுத்துவர்களை மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் தான், கடந்த ஆண்டு 86,000 ரூபாய் ஒப்பந்தத்திற்கு ஆடிட்டர் மகேஷ்வரன் கழிவறை குத்தகை எடுத்துள்ளார். மேலும் கழிவறை சுற்றியுள்ள அரசு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து தொடர்ந்து புகார் அளித்துள்ளார்.

Must Read : பப்ஜி மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு.. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு

ஆனால் கழிவறை குத்தகையை மீண்டும் தனக்கு வழங்குமாறு கார்த்தி பலமுறை தகாராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு பண்ணை வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் பேச வேண்டும் என கூறி சென்ற கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள், ஆடிட்டரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார்த்தி, மணி, ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொலையை நேரில் பார்த்த, பண்ணை வீட்டில் பணிபுரியும் பெண் கூறுகையில், மகேஷ்வரன் கட்டிலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது வந்த நான்கு பேர் அவரை துரத்தி துரத்தி வெட்டினர் மேலும் தடுக்க போன தன்னை கீழே தள்ளிவிட்டனர் என்றார். மேலும், மற்றொரு பெண் தகவல் சொல்ல ஓடும் போது அந்த கும்பல் அவரையும் தாக்கியதாக தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Murder, Tanjore

அடுத்த செய்தி