அழகியுடன் உல்லாசத்தில் ஈடுபட இளைஞர்கள் இடையே தகராறு... ஒருவர் அடித்துக் கொலை

தஞ்சையில் இளைஞர் கொலை

அழகியுடன் உல்லாசம் அனுபவிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

  • Share this:
கோவையை சேர்ந்த நபர் தஞ்சை லாட்ஜில் இறந்த கிடந்த வழக்கில் இருந்த மர்மம் நீங்கியது. 

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சின்னம்மா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் கென்னட் ஐவான். இவருடைய மகன் லென்னட் பிராங்க்ளின் (வயது 39). எலக்ட்ரீஷியன். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.கடந்த 22-ந்தேதி முதல் தங்கி இருந்த அவர் 28-ந்தேதி காலை அறையில் வாயில் ரத்தம் வழிந்த நிலையிலும், அறையில் ரத்தம் படிந்த நிலையிலும் பிணமாக கிடந்தார்.

மேலும் அவரது இடது கண்ணிற்கு கீழே வீக்கம் காணப்பட்டு இருந்தது. மேலும் பிராங்க்ளின் பிணமாக கிடந்த இடத்தின் அருகே உடைந்த நிலையில் ஹெல்மெட்டும் கிடந்தது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து சந்தேக மரணம் என தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read:  மனைவியை தங்கையாக்கி வடிவேலு ஸ்டைலில் டீலிங் - 7 லட்சத்தை சுருட்டிய தம்பதி.. ஏமாந்த பேக்கரிக்கடைக்காரர்

இந்த நிலையில் லென்னட் பிராங்களின் தங்கி இருந்த அறைக்கு குடிபோதையில் 4 பேர் வந்து சென்றது தெரிய வந்தது.இதையடுத்து தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த அருண் லிவிங்ஸ்டன் (23), ஆடக்காரத்தெருவை சேர்ந்த முகமது ஹசன்காதர் (24), மகர்நோன்புச்சாவடியை சேர்ந்த பிரவீன்குமார் (18), மானம்புச்சாவடி குஜிலிய மண்டபத்தெருவை சேர்ந்த தினகரன் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Also Read: சென்னை டிராபிக் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த வடமாநில ஓட்டுநர்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையில், 4 பேரும் சம்பவத்தன்று லென்னட் பிராங்களின் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது விடுதியில் தங்கி இருந்த ஒரு விபசார அழகியிடம் முதலில் யார் உல்லாசம் அனுபவிப்பது என்பது தொடர்பாக லென்னட் பிராங்ளினுக்கும், 4 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது லென்னட் பிராங்க்ளினை 4 பேரும், தாக்கி தள்ளி விட்டுள்ளனர். அதில் தலை சுவரில் மோதியதில் லென்னட் பிராங்க்ளின் இறந்துள்ளார். ஆனால் அவரை கொலை செய்யவேண்டும் என நாங்கள் தள்ளி விடவில்லை என 4 பேரும் கூறி உ்ளளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: