பள்ளி மாணவியை தொடர்ந்து அரசுக் கல்லூரி மாணவிக்கும் கொரோனா உறுதி!

corona

முன்னதாக நாமக்கல்லைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

  • Share this:
தஞ்சையில் பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளும், கல்லூரிகளும் மாதக் கணக்கில் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மாநிலத்தில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதனையடுத்து தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த செப்டம்பர்  1ஆம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி 10 மற்றும் 12, வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தினசரி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சிறப்பு முகாம் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் படிக்கும் 948 மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிரிமி நாசினி தெளித்தனர். மேலும் கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

Also Read:  ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!

முன்னதாக நாமக்கல்லைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகள் திறந்து ஒரு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது பெற்றோரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவின் கோலார் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த 32 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.குருநாதன் - செய்தியாளர், தஞ்சாவூர் 
Published by:Arun
First published: