• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தஞ்சையில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

தஞ்சையில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள், 4,061 கி.மீட்டர் நீளத்தில் ரூ.65 கோடியே 10 லட்சத்தி 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, வல்லம், பள்ளியஅக்ஹரஹாரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும்  தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஜீன் 12 ஆம் தேதி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளது.  கரூர் மாவட்டத்தில் 10 பணிகள், 60.60 கி.மீ.நீளத்துக்கு ரூ.1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள், 123.65 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.7.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 பணிகள், 1,169.14 கி.மீட்டர் நீளத்துக்கு, ரூ.20.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள் 1,282.35 கி.மீட்டர் தூரத்துக்கு 16.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 89 பணிகள் 574 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள் 460.85 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.5.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிகள் 25.54 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் கடலூர் மாவட்டத்தில் 58 பணிகள், 202 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள், 4,061 கி.மீட்டர் நீளத்தில் ரூ.65 கோடியே 10 லட்சத்தி 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை  ஆய்வு செய்ய  திருச்சிக்கு விமான மூலம் வந்த முதலமைச்சர் கல்லணையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணிதுறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் உள்ள முதலைமுத்துவாரி, பள்ளியஅக்ஹரஹாரம் பகுதியில் வெண்ணாறில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: