முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குழந்தை வரம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவிலின் சிறப்புகள்!

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவிலின் சிறப்புகள்!

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.

கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.

  • Last Updated :

தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப்பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு .

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள ஒவ்வொருவரும்  பெண்களுக்கு பிரசவ வலி வரும் போதும் கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்தக் காணிக்கையை செலுத்துகிறார்கள் . இங்கு தல நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.

மேலும் கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத் தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள். இவர் காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.

மேலும் படிக்க... நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? தினமும்

இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. சோழர்கள், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18 ஆவது சிவத்தலமாகும் திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப் பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம் ,திருக்கருகாவூர் , கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது .

இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன் , சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது . முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க... Aadi Perukku 2021 | ஆடிப்பெருக்கில் தாலிப்பெருக்குதல் சிறப்பு... ஏன் தெரியுமா?

கோவில் முகவரி: அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சையிலிருந்தும் திருவாரூரிலிருந்தும் இக்கோவிலுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Hindu Temple, Thanjavur