Home /News /tamil-nadu /

மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ கஞ்சா மூட்டைகள்... கடலோர காவல்படையினர் அதிர்ச்சி

மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ கஞ்சா மூட்டைகள்... கடலோர காவல்படையினர் அதிர்ச்சி

கஞ்சா மூட்டைகள்

கஞ்சா மூட்டைகள்

Thanjavur District : அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடலில் மர்மமான முறையில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகள். மீனவர் வலையில் சிக்கிய மூட்டைகளைகடலோர காவல்படை கைப்பற்றி விசாரணை.

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடலில் மர்மமான முறையில் மீனவர் வலையில் சிக்கிய மூட்டைகளை கடலோர காவல்படை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

    அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை பகுதியை சார்ந்தவர் சோமசுந்தரம். இவர் இன்று காலை வழக்கம் போல் தன்னுடைய படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். அப்போது மீன் வலையில் 5 மூட்டைகள் சிக்கியது. இதைக்கண்ட மீனவர் சோமசுந்தரம் சந்தேகமடைந்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.



    உடனடியாக இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்  ஐந்து மூட்டைகளையும் கைப்பற்றி பரிசோதனை செய்தபோது, அதில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது யார் எனும் கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : எஸ்.குருநாதன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Thanjavur

    அடுத்த செய்தி