• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தஞ்சையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றிய நகராட்சி அலுவலரை தாக்கிய பா.ஜ.கவினர் - இருவர் கைது: ஒருவர் தலைமறைவு

தஞ்சையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை அகற்றிய நகராட்சி அலுவலரை தாக்கிய பா.ஜ.கவினர் - இருவர் கைது: ஒருவர் தலைமறைவு

தஞ்சாவூர் பாஜக

தஞ்சாவூர் பாஜக

தஞ்சையில், பாஜக சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றிய நகராட்சி அலுவலர் தாக்கப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில், காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியைக் கைவிடக் கோரி பாஜகவினர் வியாழக்கிழமை அன்று தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை பனகல் கட்டடம் அருகே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், வியாழன் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக, தஞ்சை எலிசா நகர் அருகே சாலையில் உரிய அனுமதியின்றி அக்கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்

    தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையில் அங்கு சென்று ஃப்ளக்ஸ் பேனரை அகற்றினர். அப்போது உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூரிலிருந்து ஒரு வேனில் அந்த வழியே பாஜகவினர் வந்து கொண்டிருந்தனர்.

    பிளக்ஸ் பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதைப் பார்த்து விட்டு அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பாஜகவினர் சம்பவ இடத்திற்கு சென்று நகரமைப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் ராஜசேகரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார், 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    மேலும், லால்குடியைச் சேர்ந்த பாஜக தெற்கு மண்டலத் தலைவர் 44 வயதான அசோக்குமார், பாஜகவின் அறந்தாங்கி நகர செயலாளர் 33 வயதான இளங்கோவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: