உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ”பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல்படுத்திக் கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சிதான் .
மேகதாது விவகாரத்தில், மத்திய சர்க்கார் அனுமதி கொடுக்கவில்லை என அறிவித்துள்ளது. எங்களுக்கு விண்ணப்பமே வரவில்லை என தெரிவித்துள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை, ஆனால் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசியவர் , வருமுன் காப்பதற்காகவும், இது ஒரு தடுப்பு நடவடிக்கை எனவும் டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுக என்றும், குத்திய நபர் கருணாநிதி எனவும் கூறிய ராஜா, உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால், தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தடை விதித்தால் விவசாயிகளின் துரோகி திமுக என்று நிரூபணம் ஆகி விடும் என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கல்வி, கயவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பாடநூல் தலைவர் கோமாளி லியோனி, சுப.வீரபாண்டியன் ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டும், இது போன்றவர்களை நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
மேலும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் ஆதாரம் இருக்கா என கேள்வி எழுப்பியவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாகவும், அவர் பலபேரை மிரட்டி பணம் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பொறுப்பற்ற முதலமைச்சரான பினராயி விஜயனால், கொரோனா பாதிப்பில், கேரளா முதலிடத்தில் இருப்பதாக குற்றம்சாட்டியவர், திமுக ஆட்சி ஒரு ஏமாற்று சர்க்கார்” என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.