தஞ்சாவூர், கரந்தை பகுதி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45) ஆடிட்டர். இவர் தன் வீட்டுக்கு அருகில் பண்ணை ஒன்று வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். தினமும் பணி முடித்து பண்ணை வீட்டில் இரவு உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வழக்கம் போல் நேற்று இரவு பண்ணையில் அமர்ந்துள்ளார். அப்போது உங்களிடம் பேச வேண்டும் என மூன்று பேர் உள்ளே வந்துள்ளனர். அப்போது அவர் எதிர்பாராத நேரத்தில், ஆடிட்டரை மூன்று பேரும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவறிந்த வந்த மேற்கு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவரின் பண்ணைக்கு எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Must Read : கலவரம் செய்பவர்களை சுட்டுத்தள்ள இலங்கை அரசு உத்தரவு
இந்நிலையில் இரவு தனது பண்ணையில் மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.