தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த கலைவிழாவைத் தொடர்ந்து தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா நேற்று தொடங்கியது. இந்த கலைவிழா வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்களும் 11 குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
Must Read : திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் நான்காம் நாள் - புகைப்படங்கள்
முதல்நாளில் கேரளாவின் சிங்காரி மேளம் நடனத்துடன் கலை விழா தொடங்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம் மற்றும் காவடியாட்டம், ராஜஸ்தானின் ஜாக்ரி நடனமும், மராட்டியத்தின் லாவணியாட்டமும், ஜம்முகாஷ்மீரின் சுர்மா நடனமும், மத்திய பிரதேசத்தின் பதாய் நடனமும், ஹரியானாவின் பாக் நடனமும், குஜராத்தின் டங்கி நடனமும், பஞ்சாபின் பங்காரா நடனமும் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.