அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை நிறுத்த அறிவிப்பு : விவசாயிகள் அதிர்ச்சி
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை நிறுத்த அறிவிப்பு : விவசாயிகள் அதிர்ச்சி
அறிஞர் அண்ணா சக்கரை ஆலை
Arignar Anna Sugar Mills | இன்னும் இருபதாயிரம் டன் கரும்பு வெட்டபடுமால் இருப்பதால் அதனை தீயிட்டு கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவை பருவம் வரும் 27ம் தேதியுடன் நிறுத்தப்படுவதால் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் இருபதாயிரம் டன் கரும்பு வெட்டபடாமால் இருப்பதால் அதனை தீயிட்டு கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே தஞ்சை - புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2021 - 2022ம் ஆண்டிற்கான அரவை பணிகள் காலதாமதமாகவே டிசம்பர் மாதத்தில் தொடங்கியது. இதனையடுத்து விவசாயிகள் கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு அரவைக்காக அனுப்பி வந்தனர். கரும்பு வெட்டும் பணிகளில் அவ்வபோது ஆட்கள் பற்றாக்குறையால் காலதாமதம் ஏற்பட்டது. ஆலைக்கு கரும்பு அனுப்புவதற்கு, முன்பதிவு செய்த விவசாயிகள் இதனால் சிரமம் அடைந்து வந்தனர்.
இருப்பினும் கரும்பு வெட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 27ம் தேதியுடன் கரும்பு அரவைப்பணிகள் நிறைவு பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் கரும்பை அரவைக்கு அனுப்பவில்லை என்றால் அதற்கான பொறுப்பை நிர்வாகம் ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,ஆலை அரவைப்பணிகள் தாமதமாக தொடங்கியதால், வெட்டுக்கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் இன்னும் 20 ஆயிரம் டான் அரவை கரும்புகள் வெட்டப்படாமல் உள்ளது. எனவே ஆலைக்கு பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து அனைத்து கரும்பையும் அரவைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கரும்புகளை வேறு ஆலைகளுக்கு அனுப்புவதற்கு அதிக செலவு ஏற்படும். ஒரு வேளை கரும்பை கொள்ளமுதல் செய்யவில்லை என்றால் விளைநிலத்தில் கரும்பை கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என கூறுகின்றனர். எனவே அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்து அரவை முடித்த பின்பே ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : எஸ்.குருநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.