Home /News /tamil-nadu /

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசுகிறார் - ஆளுநர் தமிழிசை வருத்தம்

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசுகிறார் - ஆளுநர் தமிழிசை வருத்தம்

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai Soundarrajan | ஒரு தமிழச்சி இரண்டு மாநிலங்களை ஆண்டு கொண்டு இருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்.

அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை "இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்" என்று ஒருமையில் கூறியுள்ளார் என   தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தத்துடன் பேசி உள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாராதியார் நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜன், திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை கிளம்பிச் சென்றார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாராதியார் நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கத்தில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் "இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்“ என்று ஒருமையில் பேசியிருக்கிறார், இரண்டு மாநிலத்தில் ஒரு பெண் ஆளுநராக இருப்பது எவ்வளவு சிரமம்.

Also read : பாஜக சித்தாந்த்திற்கு ஆதரவானவர்கள் மீது மாநில அரசு கைது நடவடிக்கை - வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு

ஒரு தமிழச்சி இரண்டு மாநிலங்களை ஆண்டு கொண்டு இருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். எனவே ஒருவரை திட்டும் போது கூட மரியாதையோடு திட்டுங்கள். ஏனென்றால் தமிழுக்கு மரியாதை உண்டு, தமிழக்கு மரியாதை இல்லையென்றால் நீங்கள் தமிழர்களே இல்லை எனவும் என தமிழிசை செளந்தர்ராஜன் வருத்தப்பட்டு பேசினார்.
Published by:Vijay R
First published:

Tags: BJP, Tamilisai Soundararajan, Tanjore

அடுத்த செய்தி