Home /News /tamil-nadu /

சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் உணவக உரிமையாளரை அடித்து கொன்றவர் கைது

சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் உணவக உரிமையாளரை அடித்து கொன்றவர் கைது

உணவக உரிமையாளரை அடித்து கொன்றவர் கைது

உணவக உரிமையாளரை அடித்து கொன்றவர் கைது

அண்டக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அசோக்குமார் தனது வீட்டின் அருகே டிபன் கடை நடத்தி வருகிறார்.

  • News18
  • Last Updated :
தஞ்சை அருகே வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்து வந்ததை தட்டி கேட்ட உணவக உரிமையாளரை அடித்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடியை சேர்ந்தவர் அசோக்குமார் (49). மாற்று திறனாளியான இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். லதா கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அசோக்குமார் வீட்டின் அருகிலேயே  டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தாராசுரத்தை சேர்ந்த அன்பழகன் (50) என்பவர்  தனியார் சர்க்கரை ஆலையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அசோக்குமாரின் வீடு மற்றும் ஹோட்டல் அருகிலே அன்பழகன் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹோட்டலுக்கு வருபவர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து பலமுறை அன்பழகனை கண்டித்துள்ளார் அசோக்குமார். மேலும் மாதச் சம்பளம் வாங்கி பணம் தருவதாக கூறி உணவு சாப்பிட்டு வந்துள்ளார். சாப்பிட்ட உணவிற்கும் அவர் பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் அதேபோல் சிறுநீர் கழித்துவிட்டு சாப்பிட கடைக்கு வந்த அன்பழகனுக்கும், அசோக்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகில் கிடந்த கடப்பாறையை எடுத்து அசோக்குமாரின் தலையில் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also read... தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை... திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் போலீசார், அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அன்பழகனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News, Tanjore

அடுத்த செய்தி