Home /News /tamil-nadu /

மதுபோதையில் தாயை இரும்பு கம்பியால் குத்தி கொன்ற மகன் கைது

மதுபோதையில் தாயை இரும்பு கம்பியால் குத்தி கொன்ற மகன் கைது

அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள்

பாவை நாதன் நேற்றிரவு குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியால் அஞ்சலையம்மாள் இடுப்பில் குத்திக் கீழே தள்ளியுள்ளார்.

  • News18
  • Last Updated :
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மதுபோதையில் இருந்த நபர் தாயை இரும்பு கம்பியால் குத்தி கொன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மேல தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலையம்மாள். வயது70, இவருடைய கணவர் காசிநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அஞ்சலையம்மாள் தன்னுடைய மகன் பாவை நாதன் (38) மற்றும் மருமகள் சரண்யா இரண்டு குழந்தைகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாவை நாதன் நேற்றிரவு குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியால் அஞ்சலையம்மாள் இடுப்பில் குத்திக் கீழே தள்ளியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த அஞ்சலை அம்மாள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also read... முதன்மை காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை!

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்து அவரது உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்து வந்து இறுதி சடங்கு செய்ய பாவைநாதன் முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி, பாவைநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

- செய்தியாளர்: எஸ்.குருநாதன்
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Tanjore

அடுத்த செய்தி