• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கும்பகோணம் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சோகம்!

கும்பகோணம் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சோகம்!

கும்பகோணம் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலிப்குமார் (14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தான்.

இந்நிலையில் தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றது. அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் சென்றதால், மாடு அடிபட்டு இறந்து விடும் என பதறிய சிறுவன் மாட்டை அங்கிருந்த விரட்ட ரயில் தண்டவாளத்துக்கு ஓடியபோது, ரயில் மோதி சிறுவன் அதே இடத்தில் உயிரிழந்தான்.

Also read: நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள்.. அதிகரித்த திருட்டுகள் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஆனால் மாடு ரயில் வருவதை பார்த்து அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. சிறுவன் ரயில் மோதி இறந்த தகவல் கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: