Home /News /tamil-nadu /

கொதிக்கும் பானிபூரி குருமாவில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு.. கும்பகோணத்தில் சோகம்

கொதிக்கும் பானிபூரி குருமாவில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு.. கும்பகோணத்தில் சோகம்

 பானிபூரி குருமாவில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு.

பானிபூரி குருமாவில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு.

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே கொதிக்கும் பானிபூரி குருமாவில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்த முருகேசன், இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார், இவரது மனைவி அனுஷியா (28), தங்கள் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார், இவர்களுக்கு ரிஷி (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 27ஆம் தேதி மாலை பானி பூரிக்கு குருமா குழம்பு தயார் செய்த பாத்திரத்தை கீழே வைத்திருந்த போது, அதில்,  குழந்தை ரிஷி தவறி விழுந்ததில் படுகாயமுற்றது, அம்மாசத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ரிஷி சிகிச்சை பலன் இன்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read : அனுமதியின்றி மசூதி கட்டியதாக சர்ச்சை.. ஹெ.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

இச்சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூடாக இருந்த பானிபூரி குருமாவில், 2 வயது ஆண் குழந்தை ரிஷி, எதிர்பாராவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Kumbakonam, Tanjore

அடுத்த செய்தி