முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 92 வயது பாட்டியை கொடூரமாக எரித்துக்கொன்ற பேரன்.. தஞ்சாவூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

92 வயது பாட்டியை கொடூரமாக எரித்துக்கொன்ற பேரன்.. தஞ்சாவூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பாட்டியை கொன்ற பேரன்

பாட்டியை கொன்ற பேரன்

உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியை அவரது பேரன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :

92 வயது மூதாட்டி, வளர்த்த நாய் மற்றும் அதன் குட்டி என மூன்று பேரையும் உயிருடன் எரித்த பேரன் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல் - தனலெட்சுமி தம்பதி. இவர்களுடைய மகன் அஜித்குமார் (32). அஜித் குமாரின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், அவரது தாய் தனலட்சுமி மகனை வளர்த்து வாந்துள்ளார், இந்நிலையில் தனலெட்சுமி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தவிட்ட நிலையில், தனலட்சுமியின் தாய் செல்லம்மாள் தனது பேரனை கூலி வேலைக்கு சென்று வளர்த்து வந்துள்ளார். மேலும்  அஜித்குமாருக்கு மதுப்பழக்கம் உள்ளிட்ட தகாத பழக்கங்கள் இருந்துள்ளதாகவும், வேலை எதுவும் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 92 வயதான மூதாட்டி செல்லம்மாள் கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதனால் வீட்டில் சமையல் செய்வதற்கும், உணவு வழங்குவதற்கும் ஆளில்லாமல் இருவரும் உணவின்றி இருந்துள்ளனர். மேலும் அஜித்குமார் வீட்டில் இருந்த அரிசியை உண்டும், தண்ணீர் குடித்தும்  இருந்துள்ளார்.

Also Read: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்.. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக சமையல் செய்யாமல் பாட்டி இருந்ததாலும், அரிசியை உண்டு வந்த ஆத்திரத்திலும் தனது பாட்டி என்று கூட பாராமல் அவரை வீட்டு வாசலில் வைத்து உயிரோடு தீவைத்து கொளுத்தியுள்ளார். மேலும் வீட்டில் வளர்ந்த நாய் மற்றும் அதன் குட்டி என இரண்டையும் சேர்த்து வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு மூன்று பேரையும் எரித்து கொன்றுள்ளார்.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் செல்லமாள் எரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜீத் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Arrest, Crime News, Death, Murder, Police, Woman