Home /News /tamil-nadu /

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி.. அடித்து கொன்று ஆற்றில் வீசிய கள்ளக்காதலன், தாய் கைது!

 கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமியை அடித்து கொன்று ஆற்றில் வீசிய கள்ளக்காதலன், தாய்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் -  விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார். இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது தகாத உறவாக மாறியதால் உறவினர்கள் கண்டித்துள்ளனர். வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வயது சிறுமியை வெற்றிவேல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலே சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல், கல்லணை கால்வாயில் வீசியுள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், News On Instagram, Thanjavur

அடுத்த செய்தி