9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

பாலியல் வன்புணர்வு

தஞ்சையில் எம்.எல்.ஏவிடம் கல்வி உதவி தொகை வாங்கி தருவதாக கூறி 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம்திருவிடைமருதூர் அருகே திருபுவனம் காத்தாயி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 9 வயது சிறுமி தீ காயம் அடைந்து சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளார். இந்நிலையில் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியனிடம்  சொல்லி சிறுமிக்கு அரசிடம் இருந்து கல்வி உதவி தொகை மற்றும் நிவாரணம் வாங்கி தருவதாக  சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 60 வயதுடைய அன்பழகன்.  சட்டமன்ற உறுப்பினரிடம் சிறுமியை அழைத்து செல்ல வேண்டும் என கூறி நேற்று இருசக்கர வாகனத்தில் சிறுமியை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சிறுமியை சட்டமன்ற உறுப்பினரிடம் அழைத்து செல்லாமல், யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி கத்தியுள்ளார். இதனையடுத்து  சிறுமியை வீட்டில் விட்டு சென்றுள்ளார் அன்பழகன்.

Aslo Read : பேஸ்புக் பழக்கம்.. வாட்ஸ் அப் சேட் - வீடியோ காலில் வில்லங்கத்தில் சிக்கிய நபர்

இந்நிலையில் அன்பழகன் குறித்து  தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். அன்பழகனிடம் இது குறித்து உறவினர்கள் கேட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில்  அன்பழகனிடம் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அன்பழகன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: