தோப்பில் கள்ளச்சாரயம் காய்ச்சிய திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது; 110 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்!

கள்ளச்சாரயம் காய்ச்சிய திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பேராவூரணி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் அருகே தோப்பில் கள்ளச்சாரயம் காய்ச்சிய திமுக பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேலமணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (53), தி.மு.க. வட்ட பிரதிநிதி. செல்வராஜ் (48) தி.மு.கவை சேர்ந்தவர். மேலும், இவர் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் உள்ளார்.

இவர்களின் நண்பர் கணேசன் (57). இவர்கள் மூவரும் சேர்ந்து அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பேராவூரணி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, 50 லிட்டர் அளவு கொண்ட பேரலில், 30 லிட்டர் சாராய ஊறலும், 100 லிட்டர் அளவு கொண்ட பானையில் 80 லிட்டர் ஊறலும், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட கேனில், 4 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார் சோதனை செய்த போது விஷதன்மையுடைய வாசம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து அய்யப்பன், செல்வராஜ், கணேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published: