முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மரபணு நோயால் குழந்தை பாரதி பாதிப்பு.. மருந்து விலையோ 22 கோடி.. மகளைக் காக்க போராடும் பெற்றோர்கள்

மரபணு நோயால் குழந்தை பாரதி பாதிப்பு.. மருந்து விலையோ 22 கோடி.. மகளைக் காக்க போராடும் பெற்றோர்கள்

குழந்தை பாரதி

குழந்தை பாரதி

குழந்தை பாரதிக்கு முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் இருப்பது டாக்டர்களால் கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, 22 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்க பெற்றோர் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ், ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி, ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்ண்டாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பாரதி,2, இந்த சிறுமிக்கு கடந்த 9ம் தேதி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் இருப்பது டாக்டர்களால் கண்டறியப்பட்டது.

சிறுமி இதுவரை தவழ்ந்த நிலையில், தானாக எழுந்து நிற்க முடியாத நிலை இருந்து வருகிறாள்.  சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு, 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும் , மருந்தின் விலை 16 கோடி ரூபாய், அதை இறக்குமதி வரி 6 கோடி என 22 கோடி ரூபாய் செலவாகும்  என கூறியுள்ளனர். இதனால் உடைந்த பெற்றோர்கள், மித்ரா என்ற சிறுமிக்கு ஏற்கனவே தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பெங்களூரில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில், கடந்த நான்கு நாளாக, சிறுமி பாரதிக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து ஜெகதீஸ் கூறுகையில், இயற்கையாக புரோட்டீன் சத்து குறைப்பாடு காரணமாக ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்து விலை 16 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது. தற்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் 45 லட்சம் தான் கிடைத்துள்ளது. நண்பர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்களிடமும் உதவி கேட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களுக்காக ஊசி செலுத்த வேண்டும் என்றார். ஊசி செலுத்தவில்லை என்றால் குழந்தையின் ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்து போகும் என கண்ணீர் சிந்துகின்றனர் குழந்தையின் பெற்றோர்கள். உதவிகள் வழங்க, 97917 9345 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Baby, Tamilnadu, Tanjore, Vaccine