• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் - பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 2 இளைஞர்கள் கைது!

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் - பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 2 இளைஞர்கள் கைது!

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் - பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 2 இளைஞர்கள் கைது!

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் - பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 2 இளைஞர்கள் கைது!

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், 2 இளைஞர்கள் கைது. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டையில் ஆடு மேய்க்கச் சென்ற கனகவள்ளி என்ற பெண் புதரில் சடலமாக கண்டெக்கப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலச் சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஒரத்தநாடு அருகே ஆற்றங்கரையோரம் பதுங்கி இருந்த குற்றவாளிகள் பெரியசாமி (30), சதீஷ் (25) ஆகிய இருவரை கைது செய்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கனகவள்ளியை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த நபரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: