தஞ்சாவூரில் திருமண கறி விருந்தில் கலந்து கொண்ட மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று!

திருமணம்

கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நலிவுற்றதால் கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

  • Share this:
    திருமண கறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாப்பிள்ளை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் மேலும், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ராஜா என்பவரின் திருமணம் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி கறி விருந்து நடைபெற்றது. கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நலிவுற்றதால் கறி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனை முடிவில் மாப்பிள்ளை ராஜா உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: