முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு..

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு..

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து

Thanjavur : தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆபத்தான நிலையில் நான்கு பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட  11 பேர் உயிரிழப்பு. மேலும் ஆபத்தான நிலையில் மூன்று பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில்.  அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதில் இரண்டு 2 சிறுவர்கள் அடக்கம், மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Must Read : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து- பள்ளி மாணவர்களின் செயல் குறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ

தேரி திருவிழாவின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Car Festival, Tamil News, Thanjavur