• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெற்களஞ்சியமான தஞ்சையில் உணவுக்காக தள்ளு முள்ளு நிகழும் அவலம்

நெற்களஞ்சியமான தஞ்சையில் உணவுக்காக தள்ளு முள்ளு நிகழும் அவலம்

உணவுக்காக வரிசையில் நிற்கும் தஞ்சை மக்கள்

உணவுக்காக வரிசையில் நிற்கும் தஞ்சை மக்கள்

யானை கட்டி போர் அடித்த சோழநாடான தஞ்சையில் உணவுக்காக வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் மக்களைப் பார்க்கையில் மனம் வேதனையில் வாடுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், உணவுக்காக தள்ளு முள்ளு நிகழும் அவலம் நடந்து வருகிறது. 

மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டி போர் அடித்த சோழ நாட்டில்தான், இன்று ஒருவேளை உணவுக்காக மக்கள் முண்டியடிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்புடன் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவது டெல்டா மாவட்டத்தின் வேதனையின் உச்சம். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு, அண்ணாநகர் பகுதியில், வறுமையின் பிடியில் சிக்கியவர்களாக 1000-கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கஜா புயலால் குடிசைகள் தொடங்கி அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்கள் இன்று ஒருவேளை உணவுக்கும் கையேந்தி காத்து நிற்கின்றனர்

குழந்தை குட்டிகளுடன் தங்குவதற்குக் கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். குடியிருப்புகள் முழுவதும் நீரில் மிதக்கும் சூழலில், அரசு அதிகாரிகள் வந்து தங்களுக்கு வாழ்வு தரமாட்டார்களா என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.

அண்ணா நகர் வாசிகள். திருவாரூர் மாவட்டம் குன்னியூர் ஊராட்சியில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. பால், குடிநீர், மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

பல்வேறு தரப்பினரும் வந்து பார்த்து விட்டு செல்வதாகவும் எந்தவித மீட்சியும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் வேதனையுடன் தஞ்சை மக்கள் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டாலும், உணவு மற்றும் தங்குவதற்காவது ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட இம்மக்களின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: