Home /News /tamil-nadu /

இ.பி.எஸ் சூழ்ச்சி செய்கிறார்: ஓ.பி.எஸ்தான் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் - நேரில் சந்தித்து தனியரசு ஆதரவு

இ.பி.எஸ் சூழ்ச்சி செய்கிறார்: ஓ.பி.எஸ்தான் ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் - நேரில் சந்தித்து தனியரசு ஆதரவு

ஓ.பன்னீர் செல்வம், தனியரசு

ஓ.பன்னீர் செல்வம், தனியரசு

அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர் செல்வம்தான் வரவேண்டும் என்று தனியரசு தெரிவித்துள்ளார்.

    ஒற்றை தலைமை அஸ்திரத்தை எடுத்து கட்சி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் சூழ்ச்சியின் உச்சம் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.

    சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததாகவும், இந்த முறை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பேன் என ஓ.பன்னீர் செல்வம் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், சுயநலம் கருதாமல் கட்சியின் நலம் கருதியவர் ஓ.பன்னீர் செல்வம் எனவும், கட்சியையும் ஆட்சியையும் நம்பி ஒப்படைத்த சசிகலாவை அலட்சியப்படுத்தி அபகரித்து கொள்ள சதி செய்தது போல தற்போது சூழ்ச்சி செய்து அதிமுகவின் முழு அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவுமில்லை. தொண்டர்கள் ஆதரவும் இல்லை என கூறிய தனியரசு, அதிமுகவில் ஒற்றை தலைமை வந்தாலும் ஓ.பன்னீர் செல்வம் தான் தலைமை ஏற்க வேண்டும் எனவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றால் சசிகலாவும் ஆதரவு தெரிவிப்பார் என கூறினார்.

    அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம்

    அதிமுகவை வலிமைப்படுத்தும் விதமாக சசிகலா மற்றும் டிடிவி.தினகரனையும் சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, O Panneerselvam

    அடுத்த செய்தி