வைரலான தங்க தமிழ்ச் செல்வனின் ஆடியோ! தினகரனைச் சந்திக்க குவியும் தேனி நிர்வாகிகள்

தினகரனை கடுமையாக விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசுவது போல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news18
Updated: June 25, 2019, 10:32 AM IST
வைரலான தங்க தமிழ்ச் செல்வனின் ஆடியோ! தினகரனைச் சந்திக்க குவியும் தேனி நிர்வாகிகள்
தங்கத் தமிழ்ச்செல்வன்
news18
Updated: June 25, 2019, 10:32 AM IST
சென்னை அடையாறிலுள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு தேனி மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

அ.ம.மு.க மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் ஆகியோர் உட்பட அ.ம.மு.கவினர், தங்கதமிழ்செல்வன் தலைமையில் அ.தி.மு.கவில் இணைய உள்ளதாகவும், விரைவில் தேனிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் தனது ஆதரவாளர்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் தங்க தமிழ்செல்வனுக்கு தெரியாமல் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார்.

இந்த விவரம் தெரிந்த தங்க தமிழ் செல்வன், ‘டி.டி.வி.தினகரனை கடுமையாக விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசுவது போல் நேற்று ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோ குறி்த்து விபரமறிய தொடர்பு கொண்ட போது தங்கதமிழ்செல்வனின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், தேனி மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர், சென்னை அடையாறிலுள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் அவரைச் சந்திக்க வந்துள்ளனர். தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், தங்க தமிழ்ச் செல்வன் பேசியது மிகவும் கண்டிக்கத் தக்கது’ என்று ஒரே கருத்தில் பேசிவருகின்றனர். இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see...

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...