தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்: தங்க தமிழ்ச்செல்வன்
தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்: தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்
தேனி தொகுதிக்கு 500கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் அதிமுகவினர் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியின் விளிம்பில் உள்ளதால் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைபரப்புச் செயலாளரும், தேனி மக்களவை தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
”வாக்கு இயந்திரங்கள் வைத்திருக்கும் இடங்களில் யார் யாரோ செல்கிறார்கள். அத்துமீறி சென்றவர்கள் எந்த காரணத்திற்காக அறைக்குள் சென்றார்கள் என்று கூட அதிகாரிகள் கூற மறுக்கிறார்கள்.
அதேநேரத்தில் நேற்றைய தினம் உரிய காரணம் சொல்லாமல் பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து விட்டு மேலும் சந்தேகத்தை உயர்த்துகிறார்கள் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள்..” என்று தங்க தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.
”தேனியில் வாக்கு இயந்திரங்கள் வைத்திருக்கும் இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர் ஏஜென்ட் யாரும் இருக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பகலை விட இரவில் தான் அதிக பாதுகாப்பு தேவை . ஆனால் இரவில் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
தேர்தல் முடிவு ஒரிரு நாளில் தெரியபோவதில்லை, அதற்கு ஒரு மாத காலம் உள்ளது இந்த இடைப்பட்ட காலத்திற்கு ஆளும் அரசு எதை வேண்டுமானாலும் செய்யும் அதனால் தான் சந்தேகம் ஏற்படுகிறது” என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும், இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர் ஏஜென்ட் வாக்கு இயந்திரம் வைத்திருக்க கூடிய இடத்தில் தங்க அனுமதி கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேனி தொகுதிக்கு அதிமுகவினர் 500கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.