முகப்பு /செய்தி /தமிழ்நாடு / #Breaking | திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

#Breaking | திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

திமுகவில் இணைந்தார் தங்க.தமிழ்ச்செல்வன்

திமுகவில் இணைந்தார் தங்க.தமிழ்ச்செல்வன்

இன்று காலை தங்க தமிழ்செல்வனை சந்தித்த ஆதரவாளர்கள் அவருடன் இணைந்து அண்ணா அறிவாலயம் புறப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவலாயம் வந்து ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் தங்க தமிழ்செல்வனுக்கு தெரியாமல் தனியாக கூட்டம் நடத்தியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச் செல்வன், டி.டி.வி.தினகரனை கடுமையாக திட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதன்பிறகு தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அதனையடுத்து, தங்க தமிழ்ச் செல்வனை கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக நேற்று டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இந்தநிலையில், தங்க தமிழ்ச் செல்வன் மீண்டும் அ.தி.மு.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு, தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவலாயம் வந்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச் செல்வன் தி.மு.கவில் இணைந்தார்.

Also see... தங்க தமிழ்ச்செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்! : டிடிவி தினகரன்


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: ADMK, AMMK, Anna Arivalayam, DMK, Thanga Tamilselvan, TTV Dhinakaran