ஓபிஎஸ்-இபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது இதற்காகத்தான் - தங்க தமிழ்செல்வன் விளக்கம்

தங்க தமிழ்செல்வன்

அதிமுக-வை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர்.

 • Share this:
  ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர் என்றும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

  தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக-வை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.

  அதிமுகவை சசிகலா விரைவில் கைப்பற்றுவார்

  கடந்த 10 ஆண்டு காலமாக ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர். எனவே, நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவதற்கு தகுதி இல்லை.  சசிகலா, தனிப்பட்ட குடும்பம் இன்றைக்கு அதிமுக-வை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவார்.” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  ஜெயலலிதா இருக்கும் போதே டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா தரப்புடன் ஓ.பி.எஸ்.க்கு தொடர்பு இருந்ததாக அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். 2002ஆம் ஆண்டு அப்போதைய எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன். ஜெயலலிதாவிற்காக பதவி விலக தயங்கினார் என ஓ.பி.எஸ் விமர்சித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தங்கதமிழ்ச்செல்வன் ஓ.பி.எஸ்க்கு டிடிவி தினகரன், சசிகலா தரப்புடன் தற்போது வரை தொடர்பு இருப்பதாக சாடியுள்ளார்.

  Must Read : டி.டி.வி.தினகரனுடன் தற்போதும் தொடர்பு; ஓ.பி.எஸ் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். மேலும், பாஜக மூத்த தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: