Tamil Nadu Assembly Election Results 2021 : போடியில் ஓ.பி.எஸ்- ஐ பின்னுக்குத் தள்ளி முன்னேறும் தங்க தமிழ்செல்வன்

ஓ.பன்னீர்செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், துணை முதலமைச்சரும் அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்வெல்வத்தை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.

  • Share this:
    போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், துணை முதலமைச்சரும் அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்வெல்வத்தை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார்.

    நன்னிலம் தொகுதியில் 4 சுற்று முடிவில், அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். திமுக வேட்பாளர் ஜோதி ராமன் 15,656 வாக்குகள் பெற்றுள்ளார் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் 14,660 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஜோதி ராமன் 1,097 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

    தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 2ஆவது சுற்றில் 3,191 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. அங்கே, திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 5971 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி 3 சுற்று முடிவில், அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. டிடிவி தினகரன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கே அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 8,150 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 6,637 வாக்குகளையும் பெற்றுள்ளது. 1,513 வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை

    சிபிஎம் வேட்பாளர் சீனிவாசன் 3,508 வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 1,078 வாக்குகளைப் பெற்றுள்ளார். மநீம கதிரவன் 256 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    Must Read : எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி 2 மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

     

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்து வருகின்றது.
    Published by:Suresh V
    First published: