ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்த தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்துப் பேசினார்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்த தமிழருவி மணியன்
தமிழருவி மணியன், ரஜினிகாந்த்.
  • Share this:
ரஜினிகாந்த் பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வளைதளங்களில் உலாவந்த நிலையில், தனது உடல்நிலை சரியில்லை என்பதை உறுதிசெய்த நடிகர் ரஜினிகாந்த், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து, மக்களுக்கு தெரிவிப்பேன் என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அவரது உடல்நிலை குறித்து தமிழருவி மணியன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், சென்னை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட எழும்பூர் பகுதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ரஜினியின் இல்லத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் "ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம், இப்ப இல்லனா எப்பவும் இல்ல" என்ற வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட் அணிந்து வந்திருந்தனர். மேலும் தாங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டாவது ரஜினியை அரசியலுக்கு வர வைப்போம் என கோஷமிட்டனர்.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading