முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி திமுகவுக்கு தீவிர பிரசாரம்

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி திமுகவுக்கு தீவிர பிரசாரம்

தமிமுன் அன்சாரி - சட்டமன்ற உறுப்பினர்

தமிமுன் அன்சாரி - சட்டமன்ற உறுப்பினர்

  • Last Updated :

நாகப்பட்டினம் தொகுதியில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தவர் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி. இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிமுன் அன்சாரி, தற்போது நடைபெறுகிற நாடாளுமன்றத் தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டி களமாக மாறியுள்ளது. மீண்டும் பிரதமராக நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்துவிட்டால் அதிபர் ஆட்சி வந்துவிடும் என்ற பயம் இருக்கிறது.

எனவே பாஜக ஆட்சி அகற்றப்பட்டு ராகுல்காந்தி தலைமியிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

பாஜக அரசு தமிழக மக்களை புறக்கணிக்கிறது என்ற கருத்தை சொல்லி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டாம் என்று அ.தி.மு.க. தலைமையை நான், தனியரசு, கருணாஸ் ஆகிய மூவரும் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை. எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது.

சட்டமன்றத்தை பொறுத்தவரை பிரச்னைகளின் அடிப்படையில் தான் எங்களுடைய ஆதரவு இருக்கும். நாங்கள் எடுத்திருக்கக்கூடிய கொள்கை முடிவின் காரணமாக, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு முடிவு எடுப்போம். தகுதிநீக்கம் செய்தால் எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் மற்றும் தனியரசு ஆகிய இருவரும் பாஜக மீதான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரசாரத்தின்போது கண்ணீர்விட்ட அன்புமணி ராமதாஸ் - வீடியோ


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Thamimun ansari