முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என்.பி.ஆர்., விவகாரம்... சட்டசபைக்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் தமிமுன் அன்சாரி!

என்.பி.ஆர்., விவகாரம்... சட்டசபைக்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் தமிமுன் அன்சாரி!

தமிமுன் அன்சாரி

தமிமுன் அன்சாரி

  • Last Updated :

என்.பி.ஆர் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து வெளிநடப்பு செய்த எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி, வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்கு ஆதரவாக சட்டமன்ற வளாகத்தின் வெளியே ஒரு மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவையில் என்.பி.ஆர்., கணக்கெடுப்பில் உள்ள புதிய நடைமுறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தார்.

அப்போது, வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறி சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்தார்.

உடனடியாக அவரை கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறையினர் சில நிமிடங்களில், அவரை விடுவித்து போராட்டம் நடத்த அனுமதித்தனர்.

"பீகார் அரசுக்கு உள்ள தைரியம் தமிழக அரசுக்கு இல்லையா?" என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் ஒரு மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி சில நிமிடங்கள் அவரருகில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். தவிர, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவருமான கதிரவனும் சில நிமிடங்கள் அவருடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றார்.

Also see...

top videos

    First published:

    Tags: Thamimun ansari