Home /News /tamil-nadu /

நாகை அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தமிமுன் அன்சாரி உறுதி

நாகை அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு : நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தமிமுன் அன்சாரி உறுதி

தமிமுன் அன்சாரி

தமிமுன் அன்சாரி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கச்சா எண்ணெய் கழிவு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை அணுகினர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கச்சா எண்ணெய் கழிவு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை அணுகினர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் - குத்தாலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் (ஈ.டி.பி) இயங்கி வருகிறது. இங்கு கச்சா எண்ணெயிலிருந்து வரும் கழிவுகளை பூமிக்கடியில் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையத்தில் பிரித்தெடுக்கப்படும் கச்சா எண்ணெய் கழிவுகள் எந்திரம் மூலமாக பூமிக்கடியில் 1000 மீட்டர் ஆழத்திற்கு குழாய் மூலம் செலுத்தப்படுகிறது.

பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் கழிவுகள் பூமிக்கடியில் செலுத்தப்படுவதால் குழாய்கள் சேதமடைந்து அதிலிருந்து குத்தாலம் மற்றும் கோபுராஜபுரம் பகுதிகளில் கச்சா எண்ணெய் கழிவு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் தகவல் இத்தகவல் அறிந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கழிவு நீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் அந்த உப்பு நீர் நிலத்தில் பாய்ந்து விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு தோல் நோய்கள் மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது எனவும் கால்நடைகள் தண்ணீரை குடிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விடுவதாகவும் சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் மத்தியில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உறுதியளித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Gunavathy
First published:

அடுத்த செய்தி