ஆணாதிக்க மனநிலையால் ஜெ. படத்தை எதிர்க்கிறார்கள் - தம்பிதுரை

news18
Updated: February 13, 2018, 12:30 PM IST
ஆணாதிக்க மனநிலையால் ஜெ. படத்தை எதிர்க்கிறார்கள் - தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
news18
Updated: February 13, 2018, 12:30 PM IST
ஆணாதிக்க மனோபாவத்தால் ஜெயலலிதா படத்திறப்பை எதிர்க்கிறார்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.  மேலும் ஜெயலலிதா படத் திறப்பு விழாவை தினகரன் போன்றோர் புறக்கணித்தது மன வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பெண்ணின் வெற்றியை அங்கீகரிக்கும் பண்பாடும், மனப்பக்குவமும் இல்லாதவர்களே சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத் திறப்பை எதிர்க்கிறார்கள்.  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் காரணமானவரின் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைப்பது எங்களுடைய கடமை.

அரசியலில் யார் மீதுதான் பழியும் குற்றச்சாட்டும் இல்லை. குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி ஜெயலலிதாவின் சாதனைகளை மறைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு முன்பு துகிலுரிய முயற்சிக்கப்பட்ட பெண், படமாக நிற்பதை பார்க்க முடியாமல் திமுகவினர் மனம் புழுங்குகின்றனர். தமிழக பாஜக தலைவர்கள் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு வந்திருந்து நன்றிக்கடன் செலுத்தியிருக்கலாம். படத்திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பு ஏற்புடையதல்ல என்றும், தமிழக அரசியல் தலைவர்களின் பெண் விடுதலைக்கு எதிரான ஆணாதிக்க மனநிலையையே, ஜெயலலிதா உருவப்படத் திறப்பு பற்றிய விமர்சனங்கள் காட்டுகின்றன என்று தம்பிதுரை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...