இந்த 2021-ம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகராக முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய், தனது ரசிகர்களால் 'தளபதி' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் 2021-ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பிரபலங்களில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகராக முதலிடம் பிடித்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இரண்டாவது இடத்தையும், மகேஷ் பாபு மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். நான்காவது இடத்தை நடிகர் சூர்யாவும், தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஐந்தாம் மற்றும் ஆறாவது இடங்களையும் பிடித்துள்ளனர்.
ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏழாவது இடத்தையும், நடிகர்கள் ராம் சரண், தனுஷ் மற்றும் அஜித் குமார் முறையே எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
2021’s most Tweeted about actors in South Indian entertainment ❤️ pic.twitter.com/EwpGkshZok
— Twitter India (@TwitterIndia) December 12, 2021
நடிகைகளில், கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தைப் பிடித்தார், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகையாக, பூஜா ஹெக்டே மற்றும் சமந்தா ரூத் பிரபு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
இந்தப் பட்டியலில் காஜல் அகர்வால் நான்காவது இடத்தைப் பிடித்தார். மாளவிகா மோகனன் ஐந்தாவது இடத்தையும், தற்போது இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங் ஆறாவது இடத்தையும், சாய் பல்லவி ஏழாவது இடத்தையும் பிடித்தனர். தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, அனுபமா ஆகியோர் முறையே எட்டு, ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தைப் பிடித்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.