ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Beast | இணையத்தில் லீக்கான பீஸ்ட் ஆக்‌ஷன் காட்சி புகைப்படம்?

Beast | இணையத்தில் லீக்கான பீஸ்ட் ஆக்‌ஷன் காட்சி புகைப்படம்?

கடந்த 11-ம் தேதி பீஸ்ட் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய்யும், நெல்சனும் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சன் பிக்சர்ஸ்.

கடந்த 11-ம் தேதி பீஸ்ட் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய்யும், நெல்சனும் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சன் பிக்சர்ஸ்.

கடந்த 11-ம் தேதி பீஸ்ட் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய்யும், நெல்சனும் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சன் பிக்சர்ஸ்.

 • 1 minute read
 • Last Updated :

  பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது.

  நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து மீண்டும் எப்போது பீஸ்ட் அப்டேட் எனக் காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

  Also Read : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் கதை இதுதான்?

  இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இசைக்கருவிகளுடன் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்த அந்தப் படம் ரசிகர்களை ’வாவ்’ சொல்ல வைத்தது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பீஸ்ட் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய்யும், நெல்சனும் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சன் பிக்சர்ஸ். தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  Thalapathy Vijay Beast action scene photo leaked on the internet, Thalapathy Vijay, Beast first look poster, beast movie, beast vijay, thalapathy 65 first look poster, beast first look, thalapathy vijay, vijay beast, beast action scene, beast action sequence, vijay action scene, nelson dilip kumar, விஜய், பீஸ்ட், பீஸ்ட் படப்பிடிப்பு, நெல்சன் திலீப்குமார், விஜய் படங்கள், பீஸ்ட் போஸ்டர், பீஸ்ட் திரைப்படம், சிம்பு, beast movie, beast movie tamil, vijay, beast, beast 2022, beast tweet
  பீஸ்ட் சண்டைக்காட்சி

  இந்நிலையில், பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. அதில் ஒருவர் ராணுவ உடையில் இருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும் போது, ராணுவம் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சி பீஸ்ட் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது. பிரமாண்டமான இந்தக் காட்சியை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  Also Read : சிம்புவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்?

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: