முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தைப்பூசம் ஸ்பெஷல்.. பழனி முருகன் கோயில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தைப்பூசம் ஸ்பெஷல்.. பழனி முருகன் கோயில் செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ரயில்

ரயில்

Thaipusam 2023: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முருகன், தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும். இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீர் தோன்றியது என்று புராணங்கள் கூறுகின்றன.  அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தைப்பூசம் (பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி) தை மாதம் 22ம் தேதி வருகிறது.

இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.பிப்ரவரி 4,5 ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில், பழனிக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும்.மறு மார்க்கத்தில் பிப்ரவரி 5,6 ஆகிய இரு தினங்களில் பழனியில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் , மயிலாடுதுறைக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும்.அதே போல் பிப்ரவரி 5,6 ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறையில் காலை, 7.15 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் பழனிக்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில், அதே தினங்களில் பழனியில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு, 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் மயிலாடுதுறை- கும்பகோணம்- பாபநாசம்- தஞ்சாவூர்-உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Thaipusam