ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் சுதந்திரதின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த, ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெயியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, ‘தகைசால் தமிழர்'’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்ய முதலமைச்சர் தலைமையில், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Must Read : வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்... முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராமதாஸ்!

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: MK Stalin, Tamilnadu government