Home /News /tamil-nadu /

தகைசால் தமிழர் விருது: சங்கரய்யா போல் பணத்தை திருப்பிக் கொடுத்த நல்லகண்ணு

தகைசால் தமிழர் விருது: சங்கரய்யா போல் பணத்தை திருப்பிக் கொடுத்த நல்லகண்ணு

நல்லகண்ணு

நல்லகண்ணு

Nallakannu: 80வது பிறந்தநாளின்போது கட்சி சார்பில் நல்லகண்ணுவுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. அந்த நிதியை மீண்டும் கட்சிக்கே அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தகைசால் தமிழர் விருதுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன்  ரூ. 5ஆயிரம் சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வழங்கினார்.

    தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு இந்த விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது, அரசு வழங்கிய நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் விதமாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு சங்கரய்யா வழங்கினார்.

    ந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. 75வது சுதந்திர தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விருதையும்  ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் நல்லகண்ணுக்கு வழங்கினார்.  இதை தொடர்ந்து தமிழர் விருதுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன்  ரூ. 5ஆயிரம் சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை நல்லகண்ணு வழங்கினார்.

    இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    நீண்ட காலமாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வரும் நல்லகண்ணு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது பிற கட்சி தலைவர்களிடமும் நல்ல அபிமானத்தை பெற்றவர். அவரது 80வது பிறந்தநாளின்போது கட்சி சார்பில் நல்லகண்ணுவுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. அந்த நிதியை மீண்டும் கட்சிக்கே அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Independence day, Nallakannu, TN Govt

    அடுத்த செய்தி