• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசின் விருதை ஏற்கிறேன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மக்களுக்கு போகட்டும் - சங்கரய்யா

தமிழக அரசின் விருதை ஏற்கிறேன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மக்களுக்கு போகட்டும் - சங்கரய்யா

சங்கரய்யா

சங்கரய்யா

‘சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்று சங்கரய்யா கூறியுள்ளார்.

  • Share this:
    தமிழக அரசு அறிவித்துள்ள தகைசால் தமிழர் விருதை ஏற்றுக்கொள்வதாகவும் விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

    தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்  சங்கரய்யாவிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருது, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.  விருதுடன் சேர்த்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் , பாராட்டு சான்றிதழும் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

    மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!


    இந்நிலையில், தனக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். என். சங்கரய்யா விடுத்துள்ள  அறிக்கையில், “தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு  நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.



    மேலும், இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை கோவிட் 19 தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: Exclusive: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மணல் - சினிமாவை மிஞ்சும் பின்னணி!


    மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் தன்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளதாக கூறியுள்ள சங்கரய்யா, ‘சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: