உளவுத்துறை எச்சரிக்கையால் தமிழகம் முழுவதும் 20 கலங்கரை விளக்கங்கள் மூடல்

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கையால் தமிழகம் முழுவதும் 20 கலங்கரை விளக்கங்கள் மூடல்
களங்கரை விளக்கம்
  • News18
  • Last Updated: August 27, 2019, 12:16 PM IST
  • Share this:
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை எதிரொலியாக, கலங்கரை விளக்கங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கை வழியாக 6 தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாக உளவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், இங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரையோரங்களில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கலங்கரை விளக்கங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பாக எச்சரிக்கை கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 20 கலங்கரை விளக்கங்கள் மூடப்பட்டுள்ளன.


சென்னை மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் விடுமுறை விடப்படும். செவ்வாய்க்கிழமையான இன்றும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

மகாபலிபுரம்  கடற்கரை தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மகாபலிபுரம்  கடற்கரை சாலையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்திற்கு பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்று இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். கலங்கரை விளக்கத்தின் மெயின் கேட் பூட்டப்பட்டு அங்குள்ள காவலர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அவ்வப்போது காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியிலும் களங்கரை விளக்கம் மூடல்

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் மூடப்பட்டுள்ளது. கலங்கரை விளக்க பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பார்க்க... விவாகரத்து கேட்ட மனைவி... மனமுடைந்த கணவன் தற்கொலை...
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading