முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென்காசியில் தீண்டாமையால் மாணவர்களுக்கு தின்பண்டங்கள் மறுப்பு... மதுரையில் இருந்து 5 கிலோ தின்பண்டங்களை அனுப்பிய சமூக ஆர்வலர்கள்

தென்காசியில் தீண்டாமையால் மாணவர்களுக்கு தின்பண்டங்கள் மறுப்பு... மதுரையில் இருந்து 5 கிலோ தின்பண்டங்களை அனுப்பிய சமூக ஆர்வலர்கள்

சமூக ஆர்வலர் கோரிக்கை

சமூக ஆர்வலர் கோரிக்கை

5 கிலோ அளவிலான தின்பண்டங்களை மதுரை காந்தி நகர் தபால் நிலையத்திலிருந்து பார்சலாக அனுப்பி வைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தென்காசியில் சாதிய தீண்டாமை கொடுமையால் பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த கடைக்காரரை எதிர்த்து கேள்வி எழுப்பிய குழந்தைகளை பாராட்டும் விதமாக மதுரையில் பல்வேறு சாதியினரின் கடைகளில் இருந்து தின்பண்டங்கள் வாங்கி அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு தீண்டாமை கொடுமைகளை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தாமாக முன்வந்து கோரிக்கை வைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவ்வூரில் உள்ள பெட்டிக் கடையில் தீண்டாமை நோக்கில் தின்பண்டங்கள் வழங்க மறுத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு, 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில் அம்மாணவர்களுக்கு தமிழக முழுதும் இருந்து ஆதரவு குரல் நீடித்து வருகிறது.

ALSO READ | அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்க்க கே.சி.பழனிசாமி தகுதியில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 இதனையடுத்து மதுரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றினைத்து முறுக்கு, மிக்சர், மிட்டாய் உள்ளிட்ட 5 கிலோ அளவிலான தின்பண்டங்களை மதுரை காந்தி நகர் தபால் நிலையத்திலிருந்து பார்சலாக அனுப்பி வைத்தனர், தமிழகத்தில் பல்வேறு இது போல நடைபெறும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் : வெற்றி

First published:

Tags: DMK, Evening Snacks, Madurai, Snacks